A one-day workshop, organized by the Katugoda Jamath Association for the benefit of students from Katugoda and nearby areas sitting for this year’s G.C.E. Ordinary Level examination, was held yesterday, March 20, 2021, at the Katugoda Muhyiddeen Jumma Mosque.
The workshop featured several programs and training sessions, including:
-
- Awareness session on drug prevention
-
- Career guidance program
-
- Explanation on funeral rituals (bathing and shrouding the deceased)
-
- Qur’an recitation training based on Tajweed principles
-
- Training on performing prayers in the correct manner
-
- How to adopt safe and secure practices
These sessions were delivered by resource persons including:
Maulavi Luthfi bin Hafeel, Maulavi Jezahir, Al-Hafiz Fawas, Alhaj Nilawfar Shareef (Engineer), Ash-Shaikh Isbahan Shafdeen (Nalimi), and Sergeant Aberatne from the Drug Prevention Unit.
The organizers thank the Katugoda Welfare Movement, the KERO movement, and all members of the Katugoda Jamath Association who participated and contributed to the success of the event. May Allah (SWT) grant them the best rewards. Ameen.
O/L மாணவர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
இம்முறை க.பொ.த சாதாரன தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்த கட்டுகொடை, மற்றும் நுகதூவைப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் நலன் கருதி கட்டுகொடை ஜமாஅத் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் செயலமர்வு நேற்றைய தினம் 20.03.2021 ஆம் திகதி கட்டுகொடை முஹ்யத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்….
+ போதைப் பொருள் சம்பந்தமான விழிப்பூட்டல் நிகழ்வு
+ தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி
+ ஜனாஸா குளிப்பாட்டல் மற்றும் கபனிடல் சம்பந்தமான விளக்கம்
+ தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதும் பயிற்சி
+ தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றல் சம்பந்தமான பயிற்சி
+ பாதுகாப்பான அனுகுமுறைகளை கையாள்வது எப்படி ?
போன்ற இன்னோரன்ன பாடங்களையும், பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கிய வளவாளர்களான மௌலவி லுத்பி பின் ஹபீழ், மௌலவி ஜெஸாஹிர், அல்ஹாபிஸ் பவாஸ், அல்ஹாஜ் நிலவ்பர் சரீப் (பொறியியலாளர்) , அஷ்ஷெய்க் இஸ்பஹான் சாப்டீன் (நளீமீ),
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சாஜன் அபேரத்ன, ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடாத்திச் செல்ல ஒத்துழைப்பு நல்கிய கட்டுகொடை நலன்புரி இயக்கம், கெரோ இயக்கம் மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கட்டுகொடை ஜமாஅத் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அல்லாஹ்த்ஆலா சிறந்த நற்கூலிகளை வழங்குவானாக ஆமீன்.
Leave a Reply